தூத்துக்குடி மாவட்டம் டி. சவேரியார் புரம், தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் பகுதிநேர நாட்டுப்புற கலை வகுப்பு சார்பாக இன்று (26.09.2025) சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தலைமை ஆசிரியை மு. சிவகாம செல்வி தலைமையிலான ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கலை கற்கும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் புதியதாக சேர விரும்பும் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு கலை பொருட்கள், கலை சார்ந்த புத்தகங்கள், சான்றிதழ்கள், இசைக்கருவிகள், கலை ஆடைகள், சலங்கை உள்ளிட்ட கலைப்பொருட்கள் அனைத்தும் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
நிகழ்வை பண்பாட்டு துறை தலைமையாசிரியர் சிறப்பாக ஒருங்கிணைத்தார். துறை ஆசிரியர்கள் விழா வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்தனர்.
மேலும், இசைப்பள்ளி, ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் நாட்டுப்புற கலை வகுப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் சேர்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக, அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் தெரிவித்து குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது.
மு. சிவகாம செல்வி,
தலைமை ஆசிரியை,
மாவட்ட அரசு இசைப்பள்ளி, தூத்துக்குடி.
செல்: 94877 39296
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதிரடி மேயர் ஜெகன்! 40 வருட ஆக்கிரமிப்பு – 12 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை!!
அடுத்த
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற மின் மோட்டார் அறை – மேயர் ஜெகன் பெருமையுடன் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026