தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் எனக் கூறி வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ வெண்கல சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் அவர்கள், முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
தேசியத் தலைவர், சமுதாய சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய முத்துராமலிங்கத் தேவரின் தியாகமும் சேவையும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பதாகவும், அவரது வழிமுறைகளை பின்பற்றி சமுதாய நலனுக்காகச் செயல்படுவது தான் அவருக்கு உண்மையான மரியாதை என்றும் கவுன்சிலர் சரவணகுமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தெய்வத் திருமகனாருக்கு மரியாதை – தேவர் ஜெயந்தி முன்னிட்டு கவுன்சிலர் சரவணகுமார் மாலை அணிவித்து வணக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி — தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!!
அடுத்த
தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026