தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையையடுத்து, பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், பி & டி காலனி, கோக்கூர் குளம், ஆதிபராசக்தி நகர், டீமார்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பி & டி காலனியில் வடிகால் மற்றும் மோட்டார் அறை வழியாக மழைநீர் வெளியேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் கோக்கூர் குளம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மழைநீர் வெளியேற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. தூத்துக்குடி நகரம் முழுவதும் புறநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் தற்போது மழை தணிவடைந்துள்ள நிலையில், நீர் தேங்கிய பகுதிகளில் நீர் விரைவாக வெளியேறி வருகிறது.
ஆதிபராசக்தி நகர் பகுதியில் முக்கிய மோட்டார் அறை வழியாகவும், பீமார்ட் பின்புறத்தில் துணை மோட்டார் அமைப்பும் மூலம் மழைநீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், டீமார்ட் எதிர்புறத்திலும் மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேயர், “மழை தற்போது குறைந்த அளவிலே பெய்து வருவதால், நீர் தேங்கி நின்ற பகுதிகள் விரைவாக வடியும் நிலையில் உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் இன்று இரவிற்குள் பெரும்பாலான பகுதிகள் வறண்டு விடும்,” எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழையால் நீர் தேங்கிய தூத்துக்குடி பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து கண்காணிப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைக்கால முன்னெச்சரிக்கையில் தீவிரம் — ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
அடுத்த
மழை நீரில் நடந்து சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ – பூப்பாண்டிபுரம் முழுவதும் நீர் வெளியேற்றம் விரைவில்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026