தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், மக்கள் தலைவர் வைகோ அவர்களின் 82-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மாநகரச் செயலாளர் முருகபூபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழா கொண்டாடப்பட்டது.

மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் பேச்சிராஜ், மாநில எம்எல்எப் பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதோடு, மாவட்ட மற்றும் நகர்மட்ட நிர்வாகிகள் தொம்மை, முருகேசன், செந்தாமரைக்கண்ணன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஆண்டாள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவண பெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் பொம்முதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், எம்எல்எப் திட்ட தலைவர் காசிராஜன், எம்எல்எப் பொன்ராஜ், வேம்பு, பொய்யாழி, ஜெபக்குமார், கணேஷ் ராஜன், கழகத்தின் மூத்த முன்னோடி பால்ராஜ், பெருமாள், சாமி குமார், மனோகரன், பாலா, கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கழக தோழர்கள் பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.