மே 28 ம் தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நம் கழக தோழர்கள் ஒரு வேளை உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த ஒரு வேளை உணவு சேவையகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


அதைத்தொடர்ந்து மே 28 ம் தேதியான இன்று உலகப் பட்டினி தினத்தை  முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி ஒரு வேளை உணவு சேவையகம் சார்பில்
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான, மேட்டுப்பட்டி உப்பளத் தொழிலாளர்களுக்கு காலை உணவு, அரசு மருத்துவமனை முன் வாயில் பகுதியில் காலை உணவு, தெப்பக்குளம் பகுதியில்  Truthful Trust குழந்தைகள் மையத்தில் காலை உணவு, சிலுவைப்பட்டி பார்வையற்றோர் கருணை இல்லத்தில் காலை உணவு, தாளமுத்துநகர் தொழுநோய் மருத்துவமனையில் மதிய உணவு, புதிய பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் மக்களுக்கு மதிய உணவு, மேட்டுப்பட்டி பகுதியில் தூய்மைப்பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மதிய அன்னதானம் வழங்கி தளபதியின் ஒரு வேளை உணவு சேவையகம் உத்தரவை நிறைவேற்றி சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.