தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் பகுதியில் அமைக்கப்பட உள்ள புதிய தார்சாலை மற்றும் வடிகால் பணிகள் நடைபெறவுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெருமாள்புரம் பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையமும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுகளில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா IAS, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் கதிரேசன், மண்டல தலைவர் கலைசெல்வி, வட்ட கழக பிரதிநிதி துரை உள்ளிட்டோர் இணைந்து சென்றனர்.
மேலும், தூத்துக்குடி மாநகர மக்களின் கோரிக்கையை தொடர்ந்து ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தை (Archery) விளையாட்டுகளுக்கான பிரத்தியேக மைதானம் அமைக்க வேண்டிய இடங்களையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதிய சாலை – வடிகால் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத் திட்டங்கள் விரைவில் நடைமுறை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மாணவர்களின் கல்விப் பயணத்தை இலகுவாக்கும் மிதிவண்டி வழங்கும் விழா!!
அடுத்த
ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் துவக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026