கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வட வல்லநாடு ஊராட்சி பாறைக்காடு கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
பின்னர், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா நயினார், வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி, ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கருங்குளம் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு – குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இம்மானுவேல் சேகரன் 101வது பிறந்தநாள் விழா – அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் புதிய வீடுகள் – நாளை மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் வழங்குகிறார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026