தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 36-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



விழாவிற்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேலாளர் ராஜமணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார்.



விளையாட்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் நான்கு வண்ணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நீலநிறப் பிரிவு மாணவ, மாணவிகள் அதிக வெற்றிகளைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.



வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேலாளர் ராஜமணி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.



நிகழ்ச்சியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினர் மகிழ்ஜீவன், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சித்ரா நன்றியுரை யாற்றினார்.