தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, பூப்பாண்டியாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டுள்ளது.

இந்த கடையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சி. சண்முகையா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகித்து இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் மகாராஜா, பானு, கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், நகர கூட்டுறவு வங்கி செயலாளர் பாலமுருகன், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஊர்மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.