வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்வரத்து நிலையை மதிப்பீடு செய்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது ஒட்டநத்தம் பொதுப்பணித்துறை குளம் மற்றும் முறம்பன் தர்மத்தாய் குளத்தில் நீர்மட்டம், கரைகளின் நிலை, நீர்வரத்தின் ஓட்டம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மழைக்காலங்களில் குளங்களின் கரைகள் சேதமடையாமல் பாதுகாக்கவும், நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கதிர்வேல், அழகுமலை, ஊராட்சி செயலர் முத்துலட்சுமி, கிளை செயலாளர்கள் ஜான், சேதுராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுடலைமணி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா ஆய்வு – ஒட்டப்பிடாரம் குளங்களில் மழைநீர் சேமிப்பு பணிகள் தீவிரம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒரு செய்தி... ஒரு உத்தரவு... ஒரு தீர்வு! — பூபாலராயர்புரம் பிரச்சனையை நேரில் பார்த்த அமைச்சர் கீதா ஜீவன்!
அடுத்த
எம்.எல்.ஏ. எம்.சி. சண்முகையா மணல் மூட்டைகள் ஆய்வில் நேரில் பங்கேற்பு – பருவமழைக்கு முன்னேற்பாடு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026