கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கலியாவூர் ஊராட்சிக்குட்பட்ட உழக்குடி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து, சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா நயினார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் சதிஷ், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி, கழக நிர்வாகிகள் பொன்கனி, செந்தூர்பாண்டி உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.