தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்தை ரோடு பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மழையையும் பொருட்படுத்தாமல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழை பெய்து கொண்டிருந்தபோதிலும், பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பணிகள் எந்தவித தடையும் இன்றி சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக மேயர் நேரடியாக தளத்தில் கண்காணித்தார்.

இவ்வாய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உடன் இருந்தனர்.

சண்முகபுரம் பகுதியில் புதிய வடிகால் அமைப்பு முடிந்தவுடன் மழைக்காலங்களில் நீர் தேக்கம் போன்ற பிரச்சனைகள் முழுமையாக தீரும் என மேயர் தெரிவித்தார். மேலும், அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடிக்கப்படும் என்பதையும் அவர் உறுதியளித்தார்.