மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணியானது தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்கா அருகில் செயின்ட் மேரிஸ் கல்லூரி முன்பு தொடங்கியது .
இந்த நடப்போம் நலம் பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணியினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களை தேடி மருத்துவம் முகாமினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உட்பட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
