தூத்துக்குடியில் நான்காவது முறையாக கேரளா பர்னிச்சர் கண்காட்சி ஆடி மாதத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் இன்று துவங்கியது.

கேரளா பர்னிச்சர் கண்காட்சியினை உரிமையாளர் ஆர்.எம். நவ்ஷாத் மேலாளர் பினிஷ் மேத்யூ ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கண்காட்சியில் ஏராளமான பர்னிச்சர்கள் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது.

புகழ் பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களும் டெல்லி ஆன்டிக் டிசைனர் சோபாக்கள், நீலாம்பூர் டீக்வுட் பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

மேலும் தேக்குமர சோபா, கட்டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா மெத்தை டீப்பாய்கள் திவான் செட் ஊஞ்சல், மரபீரோ உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் கிடைக்கும் என்று நிறுவனர் ஆர்.எம். நவ்ஷாத் தெரிவித்தார்.
கேரளாபர்னிச்சர் கண்காட்சி ஜுலை 12 ம் தேதியான இன்று முதல் வருகின்ற 28 ம் தேதி வரை நடைபெறும் என மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தார்.