தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்கு பொதுக்கூட்டமானது பிரையன்ட் நகர் பகுதி ஆட்டோ காலனியில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது.



பிரையன்ட் நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் நிர்மல் சரவணகுமார் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.கே. பிரதீப், ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி. செல்வின், சங்கரநாராயணன், முகமது ஜெயலாப்தீன், பிரவின்குமார், பிரையன்ட் நகர் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் பாஸ்கர், மு. முருகன், கா. பிரதீப், சிவசங்கர், ஜாக்சன், ஜான்சன் கிங்ஸ்லி, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ். அருண் சுந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம், தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, இளம் பேச்சாளர் சஞ்சய், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் மூக்கையா, ரா. சுப்பையா, சிங்கராஜ், விஜயலட்சுமி, வைதேகி, சரவணகுமார், சிவசுப்பிரமணியன் (எ) கல்யாணி, பெரியநாயகம், மற்றும் பிரையன்ட் நகர் பகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ. ரவி நன்றியுரை நிகழ்த்தினார்.

அமைச்சர் பேசுகையில் ஓரணியில் தமிழ்நாடு என்று நம்முடைய முதலமைச்சர் நாமெல்லாம் தமிழராக ஓரணியில் திரள வேண்டும் என்று ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழக அரசின் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறவர்களும் திமுகவில் தங்களை உறுப்பினராக சேர்ந்து கொள்ள வேண்டும். பழைய உறுப்பினர்களும் இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கெல்லாம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை 3ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்படி அவர் அறிவித்து 9 நாட்களில்  இன்னைக்கு 12ம் தேதி ஆகிறது. இதுவரை 10 நாட்களில் 75 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினராக சேர்த்து இருக்காங்க, ஆகவே நம்ம தலைவருடைய அந்த ஒரு வேண்டுகோள் நாம் எல்லோரும் உறுப்பினராக சேருங்கள் என்று சொன்னது போல தொண்டர்களாக இருக்கக்கூடிய அத்தனை பேரும், செயல்வீராக இருக்கட்டும், வட்ட செயலாளர்களும், ஐடிவில் உள்ள பசங்களும், இளைஞரணி தம்பிமார்கள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்றைக்கு வந்து 75 லட்சம் பேர் தமிழ்நாட்டில திமுகவில் உறுப்பினராக தங்களை சேர்த்துக் கொண்டுள்ளார்கள். தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரைக்கும் இதுவரைக்கும் 70 ஆயிரத்து 581 பேர் சேர்த்திருக்காங்க, விளாத்திகுளம் தொகுதியை பொறுத்த வரைக்கும் 90 ஆயிரம் பேர் சேர்ந்து இருக்காங்க இந்த அளவுக்கு நம்முடைய திமுக அரசின் மீது மக்களுடைய ஆதரவு இருக்கிறது. நம்முடைய தளபதியாரின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆதரவு இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண முடிகிறது.

சில இடங்களில் பார்த்தால் நம்மை வரவேற்று கட்டாயம் எங்களை திமுக உறுப்பினர்களாக சேர்த்துக்கோங்க அப்படின்னு சொல்றாங்க சில குறை நிறைகளை சொல்றாங்க இந்த மாதிரி இருக்குது. நீங்கள் மாநகராட்சியில் சொல்லி தீர்த்து வைக்கணும் இந்த மாதிரி பிரச்சனை இருக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சொல்லுங்க, இதை எம்பி அக்கா கிட்ட சொல்லுங்க என்றெல்லாம் சொல்றாங்க குறைகளை நாம் கவனத்தோடு கேட்டுக்கொள்கிறோம்.

அதுபோல குறைகளை விரைவில் சரிப்படுத்தப்பட வேண்டியது நம்முடைய கடமை ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள அத்தனை செயல் வீரர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் இந்த தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து நாம் களப்பணியாற்றுவோம். என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நம் எல்லோரையும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தளபதியார் கலைஞருடைய வழியிலே திராவிட மாடலாச்சி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும், எல்லா மக்களுக்குமான திட்டம் அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்கள் புதிய தொழில் நிறுவனங்கள் வரணும் அனைத்து மாவட்டங்கள் மக்களும் பயனடையும் அனைத்து சமுதாய மக்களுக்குமான திட்டங்கள் வேணும் பெண்களுக்கு நாம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு வகையில் அவர் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

அதாவது மகளிர் உரிமை தொகையாக இருக்கட்டும், விடியல் பயணமாக இருக்கட்டும், பெண்களுக்கான தொழில் முனைவர் திட்டமா இருக்கட்டும் இளைஞர்களுக்கான தொழில்முறை திட்டமா இருக்கட்டும், இளைஞர்கள் எல்லோரையும் நாம் தொழில் முனைவோர் ஆக்கணும் எல்லா பக்கமும் வளர்ச்சி அடையணும் கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு தான் இன்னைக்கு வந்து தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியில் 9.65% தமிழ்நாடு வளர்ச்சியில் அதிக அளவு நம் முன்னேறியுள்ளோம் அதுபோல நம்முடைய வறுமைக்கோட்டு பட்டியல்களுடைய எண்ணிக்கை குறைந்தது ஒரு சதவீதம் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அதுவே இந்திய அளவில 11% தான் தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் தான் அதுபோல தனி நபர் வருமானம் நம்முடைய தமிழ்நாட்டில் உயர்ந்து வழங்குகிறது. நாம் ஏற்றுமதியில் உயர்ந்து உள்ளோம்.

உயர்கல்வி படிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து விளங்குகிறது. உழைக்கும் மகளிர் உடைய பெண்கள் பெண்களுடைய எண்ணிக்கை நம்முடைய தமிழகத்திலே அதிகரித்து இருக்கிறது. 41% தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் உழைக்கிறார்கள் இவ்வாறு படிப்படியாக எல்லா துறைகளிலும் நாம் முன்னேறி வந்திருக்கிறோம். சிறந்த முதலமைச்சர் என்று பத்திரிகை எல்லாம் பாராட்டிய போது தலைவர் என்ன சொன்னார் என்றால் நான் சிறந்த முதலமைச்சர் என்பதனால் எனக்கு பெருமை அல்ல என்னைக்கு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது அதுதான் நான் எதிர்பார்ப்பது அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று நம்முடைய கழகத் தலைவர் தளபதியை அறிவித்தார்கள். இன்னைக்கு அது நிறைவேறி இருக்கிறது.

எல்லா மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கீடு பண்ணுகிற ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தான் வருகிறது. தமிழ்நாடு கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய 2000 கோடி பணத்தை இதுவரைக்கும் தரவில்லை, 100 நாள் வேலை திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை இதுவரைக்கும் தரவில்லை, ஒன்றிய அரசு வருகின்ற 2026 தேர்தலில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் தமிழ்நாட்டில் அதிமுகவோடு கூட்டணி போட்டிருக்காங்க நீ கூட்டணி போட்ட எங்களுக்கு ஒன்னும் இல்லை 2019 வெற்றி பெற்றோம் 2021 சட்டமன்ற தேர்திலும் அதிமுக பாஜக கூட்டணி யார் வெற்றி பெற்றார் நாங்கள் திமுக கூட்டணி வெற்றி பெற்று தளபதி முதலமைச்சராக இருக்கிறார் என்று சொல்கிறார்.

காலையில் அமித்ஷா ஒன்று சொல்கிறார். மாலையில் எடப்பாடி ஒன்னு சொல்லுகிறார். இப்படி தான் இந்த கூட்டணி போயிட்டு இருக்குது எல்லா இடமுமே சரியான திட்டங்கள் செயல்படுத்த திமுக ஆட்சி இருந்தால்தான் மீண்டும் நம்முடைய தளபதி யாரையும் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தாங்க ஆனா என்னவோ ரொம்ப யோக்கியன் வரான் சொம்பு எடுத்து வைக்கின்ற மாதிரி எடப்பாடி யோக்கியன் மாதிரி பேசிட்டு இருக்காரு நம்முடைய தலைவரை இல்லாத பொல்லாததை பேசிட்டு கடைசில அவரே தப்பு தப்பா பேசி மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருக்காரு மக்கள் அவருக்கு சரியான ஒரு பாடம் கற்பிப்பார்கள் அவர் பேச்சுக்கே சரியான பதிலடி மக்கள் கொடுத்து வருகிறார் என்பதை நாம் கண்கூட கான்றோம்.

நாம் நம்முடைய வருகின்ற தேர்தலில் முதலமைச்சராக தளபதியாரை வரலாற்று சிறப்புமிக்க வரலாற்று முக்கியத்துவத்தை நாம் உருவாக்க வேண்டும் வரலாற்றிலேயே முக்கிய இடம் பெற மீண்டும் தளபதியார் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் நம் அனைவரும் களப்பணி ஆற்றுவோம் என்று மட்டும் கூறிக்கொண்டு இளைஞர் அணி தம்பிமார்கள் இன்னைக்கு கூட்டம் போட்டு இருக்கீங்க உங்களுடைய பங்கும் அதிகம் இருக்க வேண்டும் என்று கூறி அத்தனை பேருக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் என்று பேசினார்.