பத்மஶ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம்.பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர். அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை, ராயல் பியர்ல் சிட்டி அரிமா சங்கம், மற்றும் ஜே.எல்.ஆர். கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் தங்களது இரு கண்களையும் கருப்பு துணியால் கட்டி, ஊசியில் நூல் கோர்த்து கண்தானத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக அனைவருக்கும் உணர்வூட்டும் நிகழ்ச்சியை முன்னெடுத்தனர். பின்னர், அவர்கள் கண்தான உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் யோகேஷ் ஊடகம் மற்றும் செய்தி பிரிவு நெல்லை மண்டலம் செயலாளர், மக்கள் நீதி மய்யம். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்தான உறுதிமொழியில் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நகர செயலாளர் ராஜன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
டாக்டர். அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை கிளை மேலாளர் முத்துச் செல்வம், முகாம் ஒருங்கிணைப்பாளர் அழகுலிங்கம், மக்கள் நீதி மய்யம் தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், டாக்டர். அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனைக்கான கூப்பன்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
டாக்டர். கமல்ஹாசன் எம்.பி. பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடியில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நீதியின் பாதையில் புதுக் களம் — வழக்கறிஞராகப் புதிய பயணம் தொடங்கிய அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
அடுத்த
ஜனநாயகத்தை நசுக்கக் கூடிய முயற்சியாகவே SIR திட்டம்: கனிமொழி கருணாநிதி எம்.பி. கடும் விமர்சனம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026