ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழபுத்தனேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ.

மழைக்காலங்களில் குடிநீர் மற்றும் மின்சாரம் விநியோகம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவரமாக பேசினார். மக்கள் நலன் கருதி தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

அதே நாளில் கடந்த பெருவெள்ளத்தின் போது கரை உடைந்து பாதிப்பு ஏற்பட்ட கீழபுத்தனேரி குட்டைக்கால் குளத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். சீரமைக்கப்பட்ட மதகு மற்றும் கரைகள் குறித்து ஆய்வு செய்து, மழைக்காலத்துக்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேலும் வலுப்படுத்துமாறு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவராஜன், உதவி பொறியாளர் சதீஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய், ஊராட்சி செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.