தூத்துக்குடி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் சமூகப்பணி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் நடைபெற்ற சிறப்பு குருவழிபாட்டின் பின்னர், மேல்மருவத்தூர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருள் உத்தரவின்படி, 40வது ஆண்டு தீபாவளி சமுதாயப்பணி மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரையண்ட் நகர் நேசக்கரங்கள் இல்லம், ஹீல் அறக்கட்டளை முதியோர் இல்லம், பால் பாண்டி நகர் நியூ நேசக்கரங்கள் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோர் பள்ளி, பார்வையற்றோர் குடியிருப்புகள், கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள், சிதம்பரநகர் பாசக்கரங்கள் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ் அழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் உள்ளிட்ட பல இடங்களில் 1,200க்கும் மேற்பட்டவர்களுக்கு தீபாவளி பலகாரங்கள் — மைசூர்பாகு, அதிரசம், முறுக்கு, காரவடை, மிக்சர், உளுந்து வடை — வழங்கப்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வேஷ்டி, சேலை, ஆடைகள், போர்வைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆன்மீக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்திமுருகன், வ.உ.சி துறைமுக நிர்வாக பொறியாளர் செந்தில்கணேஷ், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, எட்டயபுரம் மன்ற தலைவி கன்னா, புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளர்கள் தனபால், பூல்பாண்டி, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், திருவிக நகர் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பத்மா, கிருஷ்ண நீலா, பிரியா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சேவையில் இணைந்தனர்.