தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு பெரிய தடையாக உள்ளது. அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால்தான் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். ஒவ்வொருவரும் நேர்மை, விழிப்புணர்வு மற்றும் கண்ணியத்துடன் சமூக முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும்” எனக் கூறி, உறுதிமொழி வாசித்தார்.
அதில், “நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன். இலஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன். வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் செயல்படுவேன். எனது நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பேன். ஊழல் சம்பவம் ஏதேனும் அறிந்தால் உரிய அதிகார அமைப்பிற்குத் தெரிவிப்பேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் கூறினர்.
நிகழ்வில் மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சரோஜா, குழாய் ஆய்வாளர் நிக்ஷன், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் ஞானமார்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
நேர்மையே நம் நம்பிக்கை - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் மனிதநேயச் செயல்: சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உதவி!!
அடுத்த
முரசொலி பாசறை 1000வது இதழ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026