தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டு தெப்பக்குளம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் மக்கள் நடைமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோவில் எதிரே இரண்டு மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) அமைந்துள்ளன. இவை கோவில் திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களுக்கும், வழக்கமாக சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளன.
எனவே, கோயிலுக்கு எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்றி, அந்த இடத்தை பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக மாற்றிக் கொடுக்க வேண்டும். மேலும், மின்மாற்றிகளை தெப்பக்குளம் கிழக்கு பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என மதிப்பிற்குரிய மாநகராட்சி மேயர் அவர்களிடம் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை நிகழ்வில் இந்துமுன்னணி நிர்வாகிகள் சிவலிங்கம், சிபு, மாதவன், கவி சண்முகம், பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன் உள்ள மின்மாற்றிகளை மாற்றக் கோரி இந்துமுன்னணி கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
ஒட்டப்பிடாரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026