ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் குலசேகரநல்லூர், ஆரைக்குளம், எஸ்.கைலாசபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் குலசேகரநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, மக்களின் கோரிக்கைகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், முகாமில் மனு அளித்த பொதுமக்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம், பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆணைகளை நேரடியாக வழங்கினார்.
அத்துடன், வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் இடுபொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் அறிவழகன், சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று முகாமின் பயனை பெற்றனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் – பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் முன் உள்ள மின்மாற்றிகளை மாற்றக் கோரி இந்துமுன்னணி கோரிக்கை!!
அடுத்த
எம்.சி. சண்முகையா MLA நிதியில் வசவப்பபுரம் பகுதியில் புதிய படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026