புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
சின்னூர் கிராமத்தில் ரூ.6.72 லட்சம் மதிப்பீட்டில், மாவிலோடை கிராமத்தில் ரூ.16.58 லட்சம் மதிப்பீட்டில், S.குமராபுரம் கிராமத்தில் ரூ.9.35 லட்சம் மதிப்பீட்டில், மேலும் T.சுப்ரமணியபுரம் கிராமத்தில் ரூ.10.42 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவருமான G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமித்ரா, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் செல்லமுத்து, உத்தண்டராமன், ஆசைத்தம்பி, பால்ச்சாமி, பவுன்ராஜ், இளைஞரணி மனோஜ், பாக முகவர் சதீஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் பல பகுதிகளில் நடைபெறும் இந்த சாலை பணிகள் நிறைவேற்றப்பட்டால், அந்தந்த கிராம மக்களுக்கு எளிதான போக்குவரத்து வசதி கிடைக்கும் என்பதில் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மா.மாரிச்செல்வம் 55வது பிறந்தநாள் – டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை – பராமரிப்பு பணி காரணமாக 7 மணி நேர மின்விநியோகம் நிறுத்தம்!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026