முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மேற்கு மண்டல் பாஜக சார்பில் மில்லர்புரம் மேற்கு பகுதியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஆட்சி காலத்தில் நாட்டில் ஏற்பட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய சாதனைகள் குறித்து பாஜக நிர்வாகிகள் உரையாற்றினர். மேலும், அவரது தொலைநோக்கு பார்வையும், தேசநலனுக்கான அர்ப்பணிப்பும் நினைவுகூரப்பட்டது. இந்த தெருமுனை பிரசாரத்திற்கு மேற்கு மண்டல் தலைவர் லிங்க செல்வம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், தங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மேற்கு மண்டல் பொதுச்செயலாளர்கள் முருகேசன், லட்சுமணன், துணைத் தலைவர்கள் இசக்கிதுரை, வேல்முருகன், ராஜா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் ராமர், பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம், பிரச்சார பிரிவு பார்வையாளர் ரவிச்சந்திரன், அயலகத் தமிழர் நலன் மாவட்ட துணைத் தலைவர் சி. எம். மாரியப்பன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் மூலம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் சிந்தனைகள் மற்றும் அவர் நாட்டிற்குச் செய்த சேவைகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.