செப்டம்பர் 15  பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்ஆகியோரது ஆனைப்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி மீனவளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அயிரவன்பட்டியில் (பாகம் எண்.5) பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம்.சி. சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் சண்முகையா எம்எல்ஏ "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்" என்ற உறுதி மொழியையும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து எடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பாகம் எண் 5 க்கு உட்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.