தூத்துக்குடி வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக மகளிர் அணியினருக்கு  இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் வழங்கி அசத்திய முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் உற்சாகத்தில் அதிமுக மகளிரணியினர்.

"மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு (01.08.25) வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி வருகை  தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு   பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக மகளிர் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் வழங்கி அசத்தினார், முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்,
 
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு   உற்சாக வரவேற்பளிக்கும் வகையில் கடந்த 17ம் தேதி முன்னாள் அமைச்சர்  செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டமானது அதிமுக தொண்டர்கள் எழுச்சியால் மாநாடு போல் காட்சி அளித்தது. அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டது.

குறிப்பாக  தமிழக முன்னாள் முதல்வர் தூத்துக்குடி  வருகையின் போது பல்வேறு பகுதிகளில் உற்சாக வரவேற்பு கொடுக்கும் வகையில் முடிவெடுக்கப்பட்டது. அது போல் அன்று வருகை தரும்  எடப்பாடியாரை பிரசித்தி பெற்ற மாதா கோவில் திருவிழாவிற்கு அழைத்து செல்வதற்கும் செல்லப்பாண்டியன் முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கையால் தூத்துக்குடி அதிமுகவினர் உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.
 
எடப்பாடி பழனிச்சாமி  தூத்துக்குடி வருகையின் போது மகளிர் அணி சார்பில் கும்பம் எடுத்து வரவேற்பது, ஆரத்தி எடுப்பது என பல நிகழ்வுகள் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் மேற்கொள்ள உள்ளதால் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கழக மகளிர் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை தனது கரங்களால் வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில் தூத்துக்குடிக்கு வருகை தரும்  கழகப் பொதுச் செயலாளரும்  வருங்கால முதல் வருமான  எடப்பாடியாருக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி பங்கு பெரிதளவு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சங்கர், மாவட்ட பிரதிநிதி சாந்தி, முன்னாள் யூனியன் கவுன்சிலர்
பெருமாள் தாய், மகளிர் அணியினர், ஜான்சி, அன்னத்தாய் மல்லிகா, முத்து லெட்சுமி, மாரியம்மாள், ஆகியோர் உடனிருந்தனர்.