ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓணமாக்குளம் ஊராட்சி, ஓணமாக்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டன.


இந்திரா நகரில் ரூ.3.27 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி நிறுவி, குடிநீர் பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டது. அதேபோல், தெற்கு தெருவில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், இளைஞரணி ராகுல், மாரியப்பன், முத்துச்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த திட்டங்களின் மூலம் ஓணமாக்குளம் கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வசதியும், மழைக்காலங்களில் நீர்நிலை தேக்கம் இல்லாத சூழலும் ஏற்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.