ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக கட்சி வாக்கு திருட்டின் மூலம் குறுக்குவழியில் ஆட்சிக்கு வந்ததை கண்டித்து, அதற்கு துணைநின்ற இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து தூத்துக்குடியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

“வாக்கு திருட்டை தடுப்போம் – ஜனநாயகத்தை காப்போம்!” என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கம் தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை முன்பு மாநகர் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று வியாபாரிகள், பொதுமக்களிடமிருந்து கையெழுத்துகளைப் பெற்றார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் சண்முகம், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மகேந்திரன், ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா மண்டலத் தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, செந்தூர்பாண்டி, ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் ராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநகர் மாவட்டத் தலைவர் பர்ணபாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன், தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முத்துமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எடிசன், சாமுவேல் ஞானதுரை, எஸ்.சி. பிரிவு மாநகர் மாவட்டத் தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆல்வின் மரியராஜ், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்டத் தலைவர் மைதீன், மாநில செயலாளர் ஆரோக்கியம், கலை இலக்கியப் பிரிவு தலைவர் செல்வராஜ், அமைப்புசாரா மாநகர் மாவட்டத் தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாணவர் காங்கிரஸ் மாநகர் தலைவர் பிரவீன் துரை, முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் கமலா தேவி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.