அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்களிடையே கட்சியின் மக்கள் நலப் பணிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அண்ணா உருவம் பொறித்த மூவர்ணக் கொடியை உயர்த்தி எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கிய அதிமுக கட்சி, இன்று 54 ஆண்டுகளாக தமிழக மக்களின் இதயத்தில் இடம்பிடித்து திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொடங்கிய மக்கள் நலப் பாதையில், முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளருமான புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் அதிமுகவை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தார்.
அவரது வழியில் தற்போது பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்லாட்சியின் கொள்கையுடன் கட்சியை முன்னெடுத்து செல்கிறார். அதிமுகவை மக்களிடம் இன்னும் வலுவாகப் பதியச் செய்ய, ஒவ்வொரு உறுப்பினரும் மக்கள் நலத்திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வில் ஒளி பாய்ச்ச வேண்டும் என்பது காலத்தால் சொல்லப்படும் உண்மை.
எனவே வரும் அக்டோபர் 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்கவிழா நாளை கட்சி திருநாளாகக் கொண்டாட வேண்டும். மாநிலம் முழுவதும் கொடியேற்றி விழா நடத்தி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் உருவப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும் இனிப்புகள் வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
தூத்துக்குடி டூவிபுரம் மாநில வர்த்தக அணி அலுவலகம் முன்பும், பழைய மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன,” என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
அம்மாவின் வழியில் அதிமுக 54 — நலத்திட்டங்களால் மக்களிடையே ஒளிரட்டும்! : முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அழைப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அழைப்பு: அதிமுக 54வது ஆண்டு – நலத்திட்ட உதவிகளுடன் திருநாளாகக் கொண்டாட வேண்டும்!
அடுத்த
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026