கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் வ.உ.சி. காய்கறி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மதிமுக மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநகர துணை செயலாளர் முருகேசன், மாநகர பிரதிநிதி செந்தாமரை கண்ணன், எம்.எல்.எப். தொழிற்சங்க திட்ட தலைவர் காசிராஜன், தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், உட்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.