தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பஞ்சாயத்து கலைஞானபுரம் கிராமத்தில் சிப்காட் சார்பாக சுமார் 20 கோடி மதிப்பில் சாலை அமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பல இடங்களில் பல்வேறு வளைவு வளைவுகளாக அமைக்கப்பட்டு வருகிறது சாலை முற்றிலும் தரம் இல்லாமல் இருக்கிறது.

விளாத்திகுளம் வட்டம் வைப்பார் பஞ்சாயத்து கலைஞானபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 989 சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் சிப்காட் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் தற்போது ஏர்டெல் நிறுவனம் சேட்லைட் டவர் அமைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 30 ஏக்கர் நிலம் அரசு வழங்கி இருக்கிறது. மற்றும் இந்த பகுதியில் உள்ள சிப்காட் அமைக்கப்பட்டுள்ள நிலங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் வருவதற்காக புதிதாக அரசு சிப்காட் மூலமாக சுமார் 20 கோடி மதிப்பில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலையை ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் இசிஆர் சாலையில் இருந்து சிப்காட் பகுதி வரை புதியதாக சாலை அமைத்து வருகிறது. ஆனால் ஏற்கனவே இசிஆர் சாலையில் போடப்பட்ட பகுதியில் இருந்து துலுக்கன் குளம் கிராமம் வரை ஏற்கனவே போடப்பட்ட பழைய சாலைக்கு மேல் பகுதியில் அப்படியே தரம் இல்லாமல் சாலை அமைத்து வருகிறது. 
ஒரு மீட்டர் ஆழம் வரை பழைய சாலையை எடுத்துவிட்டு புதியதாக சாலை அமைத்தால் நன்றாக இருக்கும் பழைய சாலைக்கு மேலே அப்படியே சாலை அமைத்தால் விரைவில் அந்த சாலை டேமேஜ் ஆகிவிடும் மற்றும் சிமெண்ட் கலவை பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக இந்த சாலையை ஆய்வு செய்து புதியதாக தரமான சாலை அமைக்க உத்தரவிட வேண்டும். ஏற்கனவே போடப்பட்ட திட்ட மதிப்பீட்டில் இசிஆர் சாலையில் இருந்து நேரடியாக சாலை அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
இப்போது அதில் பல வளைவு வளைவுகளாக சாலை அமைக்கப்பட்டு இருப்பதால் மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக உத்தரவிட்டு தூத்துக்குடி சிப்காட் நிர்வாகம் சார்பாக அமைக்கப்படும் இந்த தார் சாலையை தமிழக நெடுஞ்சாலை துறை மூலமாக தரமாக அமைக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக வேண்டுகோள் வைக்கப்படுகிறது. 
தொடர்ச்சியாக மோசமான தரம் இல்லாத சாலைகளை அமைத்தால் இந்த பகுதி மக்களை ஒன்று திரட்டி குளத்தூரில் வைத்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் முடிவு செய்து இருக்கிறது. என மாநில தலைவர் சாமு. காந்தி அறிவித்திருக்கிறார் எனவே உடனடியாக தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.