தூத்துக்குடி கந்தசாமிபுரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமானது இன்று காலை ஆர்.சி. பெத்தனி நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மண்டலம் பகுதிக்கு உட்பட்ட 3, 11, மற்றும் 12 வது வார்டு மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் கந்தசாமிபுரம் ஆர்.சி. பெத்தனி நடுநிலைப் பள்ளியில் வைத்து இன்று காலை 13 துறையின் கீழ் 43 வகையான பயன்பாடுகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமானது நடைபெற்றது.

முகாமில் 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி, 11 வது வார்டு கவுன்சிலர் கற்பக கனி, 12 வது வார்டு கவுன்சிலர் தெய்வேந்திரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் தாசில்தாா்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், திமுக பகுதி செயலாளர்கள், மகளிரணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

