எம்.எல்.ஏ உறவினர் என்று கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக 10 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்தார். அப்போது கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு தெருவை சேர்ந்த சரோஜா என்ற நானும் என் கணவரும் விவசாய தொழில் செய்து வருகின்றோம். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் பிரதீப் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ தனது உறவினர் என்றும் பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.
அதோடு பிரதீப் என்பவர் தினமும் என் வீட்டிற்கு வந்து பணம் ரெடி பண்ணியாச்சா, என்று தொடர்ந்து எனக்கு டார்ச்சர் செய்து வந்தார். நானும் அவர் கூறுவது உண்மை என்று நம்பி நகையை அடகு வைத்தும் எனது கணவர் தொழிலுக்கு வைத்திருந்த பணத்தையும் சேர்த்து 10 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்தேன். ஒரு மாத காலத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அப்படி வேலை வாங்கி தரவில்லை என்றால் பணத்தை திருப்பி தருவதாகவும் நம்பிக்கைக்கு இந்த காசோலையை வைத்து கொள்ளுங்கள் என்று கொடுத்தார். நாளடைவில் பிரதீப் மீது எங்களுக்கு சந்தேகம் வந்ததை அடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது தர முடியாது உன்னால் என்ன பண்ண முடியும் என்று கூறினார். பின்னர் என் அக்கா கணவர் கண்ணன் மூன்று கொலை செய்துள்ளார் பெரிய ரவுடி பணத்தை திருப்பி கேட்டால் உன்னையும் உன் கணவரையும் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
முன்பாக பிரதீப் இதேபோன்று என் கணவரிடமும் வீட்டை விற்பனை செய்வதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளார். நாங்கள் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். பணத்தை மீட்டு தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் சாக தான் வேண்டும். என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
எம்.எல்.ஏ உறவினர் என்று கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக 10 லட்சம் மோசடி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கூட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி கந்தசாமிபுரம் ஆர்.சி. பெத்தனி நடுநிலைப் பள்ளியில் வைத்து 3, 11 மற்றும் 12 வது வார்டு பகுதி மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026