திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.



அதைத்தொடர்ந்து கலைஞரின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஆகியோர் முன்னிலையில்,



அமைதி ஊர்வலமானது (07.08.2025) வியாழக்கிழமை இன்று காலை 7.00 மணியளவில் விவிடி மெயின் ரோடு அண்ணா நகர் 7 வது தெரு & டூவிபுரம் 5 வது தெரு சந்திப்பில் இருந்து புறப்பட்டு கேவிகே நகர், 4 வது ரயில்வே கேட், குறிஞ்சி நகர், வழியாக சென்று எட்டையாபுரம் ரோடு தி.மு.க மாவட்டக்  கழகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி மரியாதை செலுத்தி 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள்,  மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணிகளைச் சார்ந்த மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலைஞரின் அன்பு உடன் பிறப்புக்கள் உட்பட கழக செயல்வீரர்கள் திரளானோர் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.