தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஆத்தூர் மணி ஹோட்டல் குழுமம், பல ஆண்டுகளாக தரமும் சுவையும் காக்கும் பாரம்பரிய உணவகங்களாக திகழ்ந்து வருகிறது. 1972 ஆம் ஆண்டு துவங்கிய ஆத்தூர் மணி ஹோட்டல் இன்று 50 ஆண்டுகளை கடந்தும் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் 1992 ஆம் ஆண்டு துவங்கிய பானு பிருந்தாவன் மற்றும் பிருந்தாவன் ஹோட்டல்கள் 31 ஆண்டுகள் நிறைவு செய்து தொடர்ந்து வாடிக்கையாளர்களின் பேராதரவை பெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டு, பிருந்தாவன் சைவ ஹோட்டல் 31வது ஆண்டு நிறைவையொட்டி இன்று வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. ஹோட்டலில் அமர்ந்து உணவருந்துவோருக்கு எந்த வகையான உணவாக இருந்தாலும் ஒரு ரூ.30 என்ற குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டது. அதேபோல் பார்சல் எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 60% வரை சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பலர் உணவு அருந்தியும், பார்சல் எடுத்து சென்றும் காணப்பட்டனர்.
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் தமிழ் செல்வன் தெரிவித்ததாவது “பல தலைமுறைகளாக எங்கள் ஆத்தூர் மணி ஹோட்டலும், பிருந்தாவன் ஹோட்டலும் மக்கள் நம்பிக்கை வைத்த உணவகமாக இருந்து வருகின்றன. தரமும் சுவையும் மாறாமல், பாரம்பரியத்துடன் உணவுகளை தயாரித்து வழங்குவதே எங்கள் முக்கிய நோக்கம். பிருந்தாவன் சைவ ஹோட்டல் 31வது ஆண்டு நிறைவையொட்டி இன்று முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் தொடர்ந்து எங்கள் ஹோட்டல் குழுமத்திற்கு மக்கள் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
ஆத்தூர் மணி ஹோட்டல் குழுமத்தின் கிளைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, ஏர்ல், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 31 ஆண்டுகள் சேவையின் சுவை – பிருந்தாவன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலை மேம்பாட்டுப் பணிகள் வேகமாக முன்னேறுகின்றன: போல்பேட்டை பகுதியில் பணிகள் நேரில் ஆய்வு!!
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் - தூத்துக்குடியில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026