தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், பாகம் எண் 255 முள்ளூர் ஊராட்சி முத்துக்குமராபுரம் கிராமத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழுத் தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. G.V. மார்கண்டேயன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்வில் வாக்காளர்களின் முக்கியத்துவம், ஜனநாயகத்தில் வாக்குச்சாவடியின் பங்கு, கழகத்தின் சாதனைகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, வாக்குச்சாவடியை வெற்றி வாக்குச்சாவடியாக மாற்ற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ், முள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, எப்போதும்வென்றான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கனகராஜ், வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன், வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முக ஆனந்த், கிளைச் செயலாளர்கள், பாக முகவர் வைரமுத்து, பாக டிஜிட்டல் ஏஜெண்ட் சுரேஷ், கிளைச் செயலாளர்கள் பெருமாள்சாமி, லட்சுமணன், கணேசன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நிஷாந்த், ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.