திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளரும் திமுக பிரமுகருமான பி.டி.செல்வக்குமார் தலைமையில் சிறப்பு மக்கள் நல உதவிகள் வழங்கப்பட்டன.


இதன் ஒரு பகுதியாக, 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகள் மற்றும் அரிசி பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பி.டி.செல்வக்குமார் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்காக பல்வேறு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், இந்த சாதனைகளையும் திட்டங்களையும் எண்ணிப்பார்த்து திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மேலும், “மக்களும் நாடும் முக்கியம்” என்ற கொள்கையின் அடிப்படையில் பணியாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும், எப்போதும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்ட திமுகவிற்கு மக்கள் ஆதரவு தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு திமுக பொறியாளர் அணி செயலாளர் ஜோசப் சந்திரன், வக்கீல் பாலகிருஷ்ணன், ஏசுதாசன், டி.ராஜேந்தர் நற்பணி மன்ற நிர்வாகி சிம்பு கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.