திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.


விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட்ஜான், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றனர். மேலும் அமைச்சர்கள் நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ரூபி மனோகரன், ராஜா, தமிழரசி, அப்துல் வஹாப், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, திருநெல்வேலி மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாநகராட்சி துணை மேயர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, முன்னாள் எம்எல்ஏக்கள், கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், மண்டல தலைவர்கள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி மற்றும் வட்ட அளவிலான திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மேலும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் மட்டுமின்றி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை விழாக்கோலமாக மாற்றினர். அதன் பின்னர் முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.