தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி திமுக கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாரின் புதல்வி செல்வி. பொன் இசக்கி அர்ச்சனா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 102 கல்லூரிகள் அளவில் இளங்கலை வணிகவியல் ( பி.காம்) பிரிவில் பல்கலைக் கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம்‌ பெற்றார்.

அதைதொடர்ந்து முதல் இடம் பிடித்து பெற்ற தங்கப்பதக்கத்துடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது மேலும் கல்வியிலும் வாழ்விலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.