தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் மேற்கொள்ளப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முள்ளக்காடு ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைமை வகித்த ஒன்றிய அலுவலக பார்வையாளராக வந்த மணிகண்டன், வரவேற்ற ஊராட்சி செயலாளர் ராமலட்சுமி ஆகியோர் ஊராட்சி நிர்வாக பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தபோது, முள்ளக்காடு கிராம பொதுமக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் சார்பாக எல்.ஆர். சிவாகர், பிரபாகர், பாரத் ஸ்ரீராம், சண்முகநாதன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
அளித்த மனுவில் முள்ளக்காடு கிராமப் பகுதி 1 மற்றும் 2 ஆக இருந்து வரும் தூத்துக்குடி துறைமுகம் கடலோரப் பகுதிகளில் உள்ள உப்பளங்களை அகற்றிவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர். கையெழுத்திட்டிருந்தனர். அதனை 17 வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, சேகர், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், பாலசுப்பிரமணியன், ராமர், ரமேஷ் உள்ளிட்டோர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து தூத்துக்குடி உப்பள தொழிலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க கோரிக்கை விடுத்தனர். ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் பார்த்துக் கொள்கிறேன் தைரியமாக இருங்கள் என்று உறுதி கூறினார்.
இதனைத் தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை பாதுகாக்க அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
