சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற மற்றும் நல்வாழ்வு சங்கத்தினர் இன்று (23.09.2025) மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களை சந்தித்தனர்.
அப்போது, மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செய்கை மொழி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, “உங்கள் கோரிக்கையை நான் கவனமாக எடுத்துக்கொண்டுள்ளேன். வருங்காலங்களில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தருகிறேன்” என்று உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பில், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அந்தோணி மார்ஷலின், சங்க பொது செயலாளர் மெய்கண்டன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
செவித்திறன் குறைவுடையோருக்கான செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நகர விடியல் பேருந்து 57 D – இன்று மட்டும் சேவை நிறுத்தம் : பொதுமக்கள் அவதி!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அதிரடி உத்தரவால் அழகுமுத்து நகரில் மின்மாற்றி குறை உடனடியாக சரி செய்யப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026