தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள்  சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வெனஂறு சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச அளவிலான உயர் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன் ஜூனியர் ஓபன் போட்டி 2025 ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும்  மாணவர்கள்  11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஹரி பாலா தங்க பதக்கமும்  மற்றும் 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கௌஷிகா வெண்கல பதக்கமும் வென்று சாதணை படைத்தனர்.

கேம்ஸ்வில் வீரர்கள் அனைத்து சர்வதேச மற்றும் தேசிய ஸ்குவாஷ் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பாரட்டுகள் குவிந்து வருகிறது. போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் சண்முக சுந்தரம் மற்றும் பெற்றோர்களுக்கு கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகம் சார்பில் ரைபின் தார்சியஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.