தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழாவானது (12.09.2025) அன்று மாலை ஜெபமாலை பிரார்த்தனை திருப்பலி நடைபெற்று திருக் கொடியேற்றமானது தொடங்கியது.
கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்கு உயர்கல்வி பயிற்சி ஆயர் இல்லம் விமல்ஜன் தலைமை வகித்தார். அதைத்தொடர்ந்து நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்ற ஜெபமாலை, பிரார்த்தனை, பெருவிழா மாலை ஆராதனை நிகழ்ச்சிக்கு அருட்பணி மகிழன் பங்குத்தந்தை பரப்பாடி தலைமை வகித்தார்.
பின்னர் (14.09.2025) ஞாயிற்றுக்கிழமையான இன்று பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மதியம் திருவிழா திருப்பலி நிறைவில் சமபந்தி ஊர் அசன விருந்து நடைபெற்றது.
சிலுவையா கோவில் திருவிழா நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு சிலுவையாரின் ஆச்ரை பெற்று செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கும் பங்கு இறை மக்கள், பாத்திமா நகர் ஊர் நலக்கமிட்டி, சிலுவையா கோவில் நிர்வாக குழுவினர், பங்கு பேரவை, திரு இருதய சபை அருட் சகோதரிகள், பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து, உதவி பங்குத்தந்தை அருட்பணி வின்சென்ட் ஆகியோர் அழைத்தனர்.
சமபந்தி ஊர் அசன விருந்தில் அருட் சகோதரர் சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு அசன விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழா அசன விருந்துடன் நிறைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திரைப்படத்தில் வேஷம் போட்டு நடித்த நடிகரை பாா்க்க செல்லுங்கள் மனநிலையை மாற்றி விடாதீர்கள் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேச்சு!!
அடுத்த
தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026