தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழாவானது இன்று (12.09.2025) மாலை ஜெபமாலை பிரார்த்தனை திருப்பலியானது திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உயர்கல்வி பயிற்சி ஆயர் இல்லம் விமல்ஜன் தலைமை வகித்தார். நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஜெபமாலை, பிரார்த்தனை, பெருவிழா மாலை ஆராதனை நிகழ்ச்சிக்கு அருட்பணி மகிழன் பங்குத்தந்தை பரப்பாடி தலைமை வகிக்கிறார்.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிகழ்ச்சியானது தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து திருவிழா திருப்பலி நிறைவில் சமபந்தி ஊர் அசன விருந்து நடைபெறுகிறது.

சிலுவையா கோவில் திருவிழா நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு சிலுவையாரின் ஆச்ரை பெற்று செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கும் பங்கு இறை மக்கள், பாத்திமா நகர் ஊர் நலக்கமிட்டி, சிலுவையா கோவில் நிர்வாக குழுவினர், பங்கு பேரவை, திரு இருதய சபை அருட் சகோதரிகள், பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாஸ் பர்னாந்து, உதவி பங்குத்தந்தை அருட்பணி வின்சென்ட் ஆகியோர் அழைக்கிறார்கள்.