தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில், ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் தூத்துக்குடி சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் – 2025 போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

இப்போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, திறமையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், முன்னாள் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பெரியசாமி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விளையாட்டு என்பது மாணவர்களின் ஒழுக்கம், ஆரோக்கியம், போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் முக்கிய துறையாகும் என்பதையும், இப்படியான போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதையும் கலந்து கொண்டோர் பாராட்டினார்கள்.