சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் பொன்பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சாதாரண உப்பு விற்கக்கூடாது. கட்டாயம் அயோடின் கலந்த உப்புதான் விற்க வேண்டும் என்ற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஒழுங்குமுறை விதிகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர்கள் திஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு (13.08.2025) அன்று வழங்கிய தீர்ப்புரையில், "ஒரு உணவு பொருள் தடை செய்யப்பட வேண்டுமென்றால் அது சுலப்படமானதாகவோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டும்.

சாதாரண உப்பு உற்பத்தி செய்வது உடல்நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது என்றும் அதில் கலப்படம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. உப்பு மூன்று இயற்சை பொருட்களை கொண்டு அதாவது தண்ணீர், காற்று மற்றும் சூரியன் ஒளியின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரண உப்பு உருவாக்கப்பட்டு மனித தேவைக்காக சமையல் உபயோகத்திற்கு மட்டுமன்றி பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவ தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அயோடின் குறைபாடு என்பது எந்த நாட்டிலும் பெருந்தொற்று நோயல்ல.

அது ஒரு கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சத்துக் குறைபாடாகவே நாட்டில் சில பகுதிகளில் உள்ளது. பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அதிகப்படியான அயோடின் உபயோகிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும் அது தொண்டை கேன்சர் மற்றும் அதிகப்படியான தைராய்டு வளர்ச்சிக்கு அடியாலிடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீர்ப்புரை வழங்கிய நீதியரசர்கள் மற்றும் வழக்கறிஞர் ரவி அனந்த பத்மநாபன் ஆகியோருக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.