தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருக்கும் 6 வது புத்தக திருவிழா கலெக்டா் இளம்பகவத் தலைமையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டு பேசுகையில்,

தூத்துக்குடி மாவட்டத்தின் 6 வது புத்தகத்திருவிழா நிகழ்ச்சியில் “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ் சிறப்பாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரா் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் எதிர்கால சந்ததியினர்களான இளைய சமுதாயத்தினர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், வரலாறு, பண்பாடு, மொழி, கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இப்புத்தகம் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு அறிவுறுத்தினார்கள். 
இந்த ஆண்டு இப்புத்தக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடையே இலக்கிய வினாடி வினா, இலக்கிய சொற்பொழிவுகள், கலை இலக்கிய நிகழ்வுகள், கவிதை வாசித்தல் புனைதல் உள்ளிட்ட புதிய நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, எதிர்கால சந்ததியினர்களான அனைத்து மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தக திருவிழாவினை கண்டு களித்து, புத்தகங்களை வாங்கலாம், படிக்கலாம் மற்றும் உங்களுடைய அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் புகைப்பட கண்காட்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பாக நமது மாவட்டத்தின் சிறப்பான வனத்தில் உள்ள உயிரினங்கள் மட்டுமல்லாது, தேரிக்காடு பகுதியில் உள்ள மண்ணின் சிறப்பு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளுவதற்கு ஏதுவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புத்தகம் வாசிக்கும்பொழுது எழுத்தாளர்களின் அனுபவத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம். புத்தகம் வாசிப்பது என்பது அனுபவ அறிவை நாம் பெற்றுக் கொள்வது.
புத்தகம் வாசிப்பதன் மூலம் நமது அறிவாற்றல் மேம்படும். எனவே, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிட வேண்டும். குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே கைபேசியின் பயன்பாட்டை அகற்றிவிட்டு புத்தகம் வாசிக்க வைப்பது என்பது மிக சவாலாக உள்ளது. கைபேசியில் நேரத்தை செலவிடுவதை காட்டிலும் புத்தகம் வாசிப்பதில் செலவிட வேண்டும். எனவே அனைத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக நாம் புத்தகத்தை வாசிக்கிறமோ அவ்வளவு அதிகமாக நமது அறிவாற்றல் மேம்படும். மிகச்சிறப்பாக இப்புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்துள்ள கலெக்டருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாது எனது பேரன் மாலை நேரத்தில் செல்போனில்தான் முழுமையாக கவனம் செலுத்துவான் ஆனால் இப்போது ஆசிாியா்களின் அறிவுரையின்படி பள்ளி சென்று வீட்டுக்கு வந்ததும் முழுமையாக புத்தகத்தை தான் படிக்கிறான். அதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. இதே போல் மற்ற குழந்தைகளும் பின்பற்றி அறிவுத்திறனை வளர்த்துகொள்ள வேண்டும். என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சிவசுப்பிரமணியன், உதவி ஆட்சியர் ஹீமான்ஷீ மங்கள், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலர் (பொ) சிதம்பரநாதன், மருத்துவ கல்லூாி டீன் சிவகுமாா், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, துணை அமைப்பாளர் இந்திரா, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பழனி, வட்டச்செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் அண்ணாத்துரை, சுரேஷ்குமாா், மாநகராட்சி நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீா் அகமது, சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், முன்னாள் வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன், மதிமுக மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் மகாராஜன், சிபிஐ முன்னாள் நகர செயலாளர் ஞானசேகா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாவட்ட நூலகா் ராம்சங்கா், மற்றும் கமலி, நெய்தல் அண்டோ, மாியதாஸ், மணி, அல்பட், பபாசி அமைப்பின் செயலாளர் முருகன், அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் புத்தகம் வாசிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் நன்றியுரையாற்றினாா். 