ஆதியந்தம் கடந்த பரம்பொருளாகிய இறைவன் ஆன்மாக்கள் உய்யும்படி அருளிய திருத்தலங்கள் பலவாக இருந்தாலும், அவற்றுள் “சீலம் சேர் திருமந்திரநகர்” எனப் புகழப்படும் தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக சிறப்புடன் விளங்குகிறது. இங்கு எழுந்தருளி இருக்கின்ற சுவாமி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர், அவருடன் அம்மன் ஸ்ரீ பாகம்பிரியாள் எனப் பெயர்பெற்றுள்ளார்.
இத்திருக்கோயிலின் தோற்றத்துக்கு சுவையான புராணக்கதை ஒன்று குறிப்பிடப்படுகிறது. முருகப் பெருமானின் திருமணத்தைக் காணச் செல்லும் வழியில், இத்தலத்தில் தங்கியிருந்த சிவபெருமானையும் உமாதேவியையும் வழிபட்ட சுவாமிகள், ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசிக்க வேண்டினர். ஆனால் கடலலைகளின் ஓசை, பனைமரங்களின் ஓலை சலசலப்பு, மண்பாண்டம் தட்டும் ஓசை ஆகியவற்றால் இடையூறு ஏற்பட்டது. அதனை நிறுத்தி, அன்னைக்கு சிவபெருமான் மந்திர உபதேசம் செய்ததால் இத்தலம் திருமந்திரநகர் எனப் பெயர்பெற்றது. பின்னர் காசிப முனிவர் இங்கு சிவலிங்கத்தை நிறுவி வழிபாட்டைத் தொடங்கினார். சங்கரராமபாண்டியன் எனும் குறுநில மன்னன் இம்மூர்த்தியை வழிபட்டு மகப்பேறு பெற்றதால் இத்திருக்கோயில் உருவாகியதாக வரலாறு கூறுகிறது.
இந்நிறைவான விச்வாவஸு வருடம் ஐப்பசி 19ம் தேதி (05.11.2025) புதன்கிழமை, அஸ்வினி நட்சத்திரம், பௌர்ணமி, சித்த யோகம் இணைந்த சுபமுஹூர்த்தத்தில், காலை 9.15 மணி முதல் 10.00 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா தொடங்கிய பின், ஐப்பசி 29ம் தேதி (15.11.2025) சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம், ஏகாதசி திதி மற்றும் சுபயோக நாளில், மாலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ்விழாவில் இறைவனின் அருளைப் பெற, பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆன்மீக மகிழ்வும், எல்லா வளமும் நலமும் அடைய வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பேட்டியின் போது இணை ஆணையர் அன்புமணி, தக்கார் வள்ளிநாயகம், செயல் அலுவலர் தமிழ்ச் செல்வி, முன்னாள் அறங்காவலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், இறைப்பணியாளர்கள் ஆறுமுகம், சாந்தி, பாலசங்கர், இளங்குமரன், ஜெயலெட்சுமி, மகேஸ்வரன், மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திருமந்திரநகரில் சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் பவுர்ணமி திருவிழா – திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறவுள்ளது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெப்பக்குளம் சுற்று பூங்கா பணிகள் வேகமாக முன்னேறுகின்றன – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
மழைக்கு முன் தயாராகும் தூத்துக்குடி! — “கொசுக்களுக்கு எவ்வித இடமும் இல்லை!” உறுதியுடன் செயல்படும் மாநகராட்சி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026