கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் சிதம்பராபுரம் ஊராட்சி, கழுகாசலபுரம் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் இன்று துவங்கின.

இந்த பணியின் அடிக்கல் நாட்டும் நிகழ்வை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் G.V. மார்கண்டேயன் துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஸ்டீபன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி முத்தையாக்கண்ணு, ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் முருகேசன், மௌனதாஸ்குமார், சுரேஷ்குமார், மாடசாமி, எட்டயபுரம் பேரூர் கழக துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர் சின்னப்பர், ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி அர்ச்சனா உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.