தமிழ் நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 158 வது பிறந்த தின விழாவானது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியில் நடைபெற்றது இன்றைய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார் நா. திருமால் முன்னிலை வகித்தார் சக்தி செல்லப்பா மாவட்ட செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் பிரகலாதன் மிருதங்க கலைஞர் வரவேற்புரையாற்றினார்.
ஜெகவீர கட்டபொம்மு தொடர்ந்து நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும் என்ற தலைப்பில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியில் கல்லூரி நவீன நாடகத்துறை ஆசிரியர் முனைவர் D. நமசிவாயம் சிறப்புரையும், மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவில்பட்டி நகர துணைத் தலைவர் பாஞ்சை. கல்யாண் கலந்து கொண்டார்கள்.
சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தினை தா. லிங்கையா திறந்து வைத்தார்கள். மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியர் குட்டி ராஜா வில்லிசை கலைஞர்கள். லிங்கம்மாள் லட்சுமி பாடகர்கள் நாடகக் கலைஞர் ராமர் கிருஷ்ணமூர்த்தி முருகேசன் மகாராஜா சேகர் பாப்பையா ஆகியோர் பாடல்கள் பாட ஜெயக்குமார் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
இன்று கூடிய கலைஞர்கள் ஒன்றிணைந்து சங்கரதாஸ் சுவாமிகள் நாடக மன்றம் என்ற அமைப்பினை துவங்கி இருக்கிறார்கள். மாதந்தோறும் ஒரு நாள் காட்டுநாயக்கன்பட்டியில் சந்தித்து நாடக பயிற்சி மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
