தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்பேரில் மாநிலம் முழுவதும் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை நடைபெற்று வரும் “நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் புதியம்புத்தூரில் நடைபெற்றது.
இந்த முகாமை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் இளம்பகவத், சண்முகையா எம்எல்ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர், கலெக்டர் மற்றும் எம்எல்ஏ மூவரும் குத்துவிளக்கேற்றி வைத்த பின், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு முழுமையான சேவையை வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
விழாவில் தாசில்தார் சண்முகவேல், பயிற்சி கலெக்டர் புவனேஷ் ராம், திமுக ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் ஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், இளம் பேச்சாளர் சண்முக நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா, மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் பத்மநாபன், காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுந்தரலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் கோகுல், புதியம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் கலைவாணி, சுகாதார துறை அலுவலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து சுகாதார பரிசோதனை செய்துகொண்டனர். 30-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று காசநோய், தோல் நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு, மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து ராமநாதபுரம் கீழக்கரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
பொதுமக்கள் நலன் கருதி – திரேஸ்புரம் பாதாள சாக்கடை, வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026